மலையாளக் கவிஞர் விஷ்ணு நாராயணன் நம்பூதிரி மறைவு

பிரபல மலையாளக் கவிஞரான விஷ்ணு நாராயணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81.
மலையாளக் கவிஞர் விஷ்ணு நாராயணன் நம்பூதிரி மறைவு (கோப்புப்படம்)
மலையாளக் கவிஞர் விஷ்ணு நாராயணன் நம்பூதிரி மறைவு (கோப்புப்படம்)

பிரபல மலையாளக் கவிஞரான விஷ்ணு நாராயணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81.

மலையாள இலக்கியத்தின் முக்கிய கவிஞராக அறியப்படுபவர் விஷ்ணு நாராயணன் நம்பூதிரி. நவீன கவிதைகளை நேர்த்தியாகவும், எளிமையாகவும் படைப்பதில் சிறந்து விளங்கிய விஷ்ணு நாராயணன் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

ஸ்வாதந்த்ரியாதே குரிச்சோரு கீதம், பிராணயா கீதங்கல், உஜ்ஜயினியேல் ராப்பகலுகல், ஆரண்யகம், அபராஜிதா, பூமிகீதங்கல் மற்றும் அலகடலம் நயம்பலுகலம்  உள்பட பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார்.

இந்நிலையில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் வியாழக்கிழமை மரணமடைந்தார்.

விஷ்ணு நாராயணன் நம்பூதிரி கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com