தமிழகம், கேரளம் உள்பட 7 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகம், கேரளம் உள்பட 7 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம், கேரளம் உள்பட 7 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 1,51,708-ஐ கடந்தது. இது மொத்த பாதிப்பில் 1.37 சதவீதம்.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், தமிழகம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 16,738 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 89.57 சதவீதம் பேர் 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 8,807 பேருக்கும், அடுத்ததாக கேரளத்தில் 4,106 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தினசரி பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணத்தை கண்டறியவும், மாநில சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கரோனா தொற்றை கட்டுப்படுத்தவும்,  7 மாநிலங்களுக்கு உயர்நிலை ஒழுங்கு குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

மறுபுறம், நாட்டின் ஒட்டு மொத்த கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  2021 பிப்ரவரி 25ம் தேதி, நிலவரப்படி ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5.17 சதவீதமாக உள்ளது.

நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று  1,07,38,501 ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை  97.21 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,799 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com