முக்கிய நகரங்களில் சமையல் எரிவாயு உருளையின் விலை நிலவரம்

நாடு முழுவதும் மானியமுள்ள மற்றும் மானியமில்லாத சமையல் எரிவாயு உருளைகளின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் சமையல் எரிவாயு உருளையின் விலை நிலவரம்
முக்கிய நகரங்களில் சமையல் எரிவாயு உருளையின் விலை நிலவரம்


புது தில்லி: நாடு முழுவதும் மானியமுள்ள மற்றும் மானியமில்லாத சமையல் எரிவாயு உருளைகளின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இந்த விலையேற்றத்தின் மூலம் ஒரு சமையல் எரிவாயு விலை சென்னையில் ரூ.810 ஆகவும், தில்லியில் ரூ.794 ஆகவும் மும்பையில் ரூ.794 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.820 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.846 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு விலை ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மானியமில்லாத சமையல் எரிவாயு உருளை விலை பிப்ரவரி முதல் வாரத்தில் ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக கடந்த 15-ஆம் தேதி மீண்டும் ரூ. 50 உயா்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் ரூ.75 உயா்த்தப்பட்டது. இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது முறையாக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.25 இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஒவ்வொரு வீட்டுக்கும் மானிய விலையில், 12 சமையல் எரிவாயு உருளைகள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு மேல் கூடுதலான எரிவாயு உருளைகள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நியச் செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றியமைத்து வருகின்றன.

இதன்படி, மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை இன்று மீண்டும் ரூ.25 உயா்த்தப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் இது 3-ஆவது விலையேற்றமாகும். முன்னதாக பிப்.4-ஆம் தேதி ரூ.25 உயா்த்தப்பட்டது. பிறகு பிப்ரவரி 15-ஆம் தேதி ரூ.50ம், தற்போது மேலும் ரூ.25 உயா்த்தப்பட்டுள்ளதால் ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனா்.

இன்று முதல் அமலுக்கு வந்த இந்த விலையேற்றத்தின்படி சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு புறம் சமையல் எரிவாயு உருளையின் விலையும், மற்றொரு புறம் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வருவது ஏழை, எளிய மக்களுக்க மென்மேலும் பொருளாதாரச் சுமையை அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com