மார்ச் 1 முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்: பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானில் அனைத்து பள்ளிகளும் மார்ச் 1 முதல் வழக்கம்போல் 5 நாள்கள் வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் மெஹ்மோத் தெரிவித்தார். 
மார்ச் 1 முதல் வழக்கமாகப் பள்ளிகள் செயல்படும்: பாகிஸ்தான் அமைச்சர்
மார்ச் 1 முதல் வழக்கமாகப் பள்ளிகள் செயல்படும்: பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானில் அனைத்து பள்ளிகளும் மார்ச் 1 முதல் வழக்கம்போல் 5 நாள்கள் வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் மெஹ்மோத் தெரிவித்தார்.  என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் மெஹ்மோத் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், 

மார்ச் 1 திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளிலும் வழக்கம்போல் 5 நாள்கள் வகுப்புகள் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளன. 

சில முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்.28 வரை மட்டுமே செல்லும். எனவே, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்திற்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உடல் வெப்பநிலை பரிசோதித்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். 

முன்னதாக, கராச்சி, ஹைதராபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய மாவட்டங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com