வாக்காளர்களே கவனியுங்கள்.. எந்தெந்த சேவைக்கு எந்தெந்த விண்ணப்பம்

நாட்டில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்குரிமைபெற தகுதியானவர்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு சிறப்பு முகாம்களை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
வாக்காளர்களே கவனியுங்கள்.. எந்தெந்த சேவைக்கு எந்தெந்த விண்ணப்பம்
வாக்காளர்களே கவனியுங்கள்.. எந்தெந்த சேவைக்கு எந்தெந்த விண்ணப்பம்


நாட்டில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்குரிமை பெற தகுதியானவர்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு சிறப்பு முகாம்களை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

2021-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று, இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், வாக்காளர் பெயர் சேர்க்க, பெயரை நீக்க, தொகுதியை மாற்ற என பல்வேறு சேவைகளைப் பெற அந்தந்த விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான சான்றிதழ்களை இணைக்க வேண்டியது அவசியம்.

இந்தச் சேவைகளை தேர்தல் ஆணையத்தின் செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, இதே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து  வீட்டிலிருந்தே உங்களுக்குத் தேவையான சேவையைப் பெறலாம்.

அந்த வகையில், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க மற்றும் ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய படிவம் 6.

வெளிநாடு வாழ் இந்யித வாக்காளர் பெயர் சேர்க்க படிவம் 6ஏ.

வாக்காளர் பட்டியலில் வேறொரு நபரின் பெயரை சேர்க்க மறுப்பு அல்லது பெயரை நீக்கம் செய்ய படிவும் 7.

வாக்காளர் விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8.

ஒரே தொகுதியில் ஒரு பாகத்திலிருந்து வேறொரு பாகத்திற்கு மாற்றம் செய்ய படிவம் 8ஏ.

மேலும் விவரங்கள் அறிய https://eci.gov.in என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com