தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வெளியாகிறது

தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிறது. புது தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி வெளியாகிறது
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி வெளியாகிறது


புது தில்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிறது. புது தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அட்டவணையை அவர் வெளியிட உள்ளார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் சுநீல் அரோரா பேசுகையில், கரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், சுகாதாரத்துறையினர் மூலம் அதனை எதிர்கொண்டு வருகிறோம். தேர்தல் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் பணி பெரும் பங்கு வகிக்கும்.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது என்று தெரிவித்தார்.

அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது.

வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் அனைவரும் கரோனா தடுப்பூசி போடப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்கும் இணையதளம் மூலமே அனுமதி வழங்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தேவந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com