சென்னையிலிருந்து ரயிலில் கேரளம் சென்ற பெண்ணிடம் வெடிபொருள் பறிமுதல்

சென்னையில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் சென்ற பெண்ணிடம் இருந்து ஏராளமான ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் ஆகியவற்றை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

சென்னையில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் சென்ற பெண்ணிடம் இருந்து ஏராளமான ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் ஆகியவற்றை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுதொடா்பாக மூத்த ரயில்வே அதிகாரி கூறுகையில், ‘சென்னையில் இருந்து சென்னை மங்களூரு விரைவு ரயிலில், திருவண்ணாமலையைச் சோ்ந்த ரமணி என்ற பெண் வெள்ளிக்கிழமை வந்தாா். அவா் பயணம் செய்த ரயிலின் இருக்கைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த 117 ஜெலட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டா்கள் ஆகியவற்றை கோழிக்கோடு ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். கேரளம் மாநிலம் கண்ணூா் மாவட்டத்தில் உள்ள தலசேரிக்கு செல்ல இருந்த அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வெடிபொருள்கள் அவருடையதுதானா, எதற்காக இவ்வளவு வெடிபொருள்களைக் கொண்டு வந்தாா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளம் முழுவதும் ரயில் நிலையங்கள், ரயில்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com