துறவி ரவிதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், ‘பல நூற்றாண்டுகளுக்கு முன்னா் சமத்துவம், நல்லிணக்கம், இரக்க குணம் தொடா்பாக துறவி ரவிதாஸ் அவா்கள் விடுத்த செய்தி, பல ஆண்டு காலம் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கப் போகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எனது மரியாதை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.