காங்கிரஸ் கட்சி அனைத்து மக்களையும் சமமாகப் பார்க்கிறது என ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சனிக்கிழமை சாந்தி சம்மலன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆனந்த் சர்மா, ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங், கபில் சிபல் மற்றும் விவேக் தங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய குலாம்நபி ஆசாத் காங்கிரஸ் கட்சி எல்லா மதங்களையும், மக்களையும் சமமாக மதிக்கிறது.அதுவே எங்களின் பலம். அதனை நாங்கள் தொடர்வோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா என்பது ஒன்று தான். நாங்கள் வடக்கில் இருந்து தெற்கிற்கும் செல்வோம். இது தொடரும்” எனத் தெரிவித்தார்.