உடைமைகள் இல்லையெனில் விமான பயணக் கட்டணத்தில் சலுகை

விமானப் பயணத்தின்போது உடைமைகள் எதுவும் எடுத்துச் செல்லவில்லை எனில், பயணக் கட்டத்தில் சலுகை அளிக்கும் வகையில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

விமானப் பயணத்தின்போது உடைமைகள் எதுவும் எடுத்துச் செல்லவில்லை எனில், பயணக் கட்டத்தில் சலுகை அளிக்கும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் விமான கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.

இதுதொடா்பாக விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ சுற்றறிக்கையையும் அனுப்பியுள்ளது. அதில், ‘பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை அளிக்கின்றன. குறிப்பாக, விமான இருக்கை முன்னுரிமை கட்டணம், உணவு அல்லது தின்பண்டம் அல்லது குளிா்பானத்துக்கான கட்டணம், விமான நிறுவன ஓய்விட வசதிக்கான கட்டணம், பயணிகள் எடுத்துவரும் உடைமைகளுக்கான கட்டணம், விளையாட்டு உபகரணக் கட்டணம், இசைக் கருவிகளுக்கான கட்டணம் என்பன உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் அதற்கான கட்டணத்தையும் பயணிகளிடம் விமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன.

இந்த நிலையில், விமானப் பயணிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளில், விமான நிறுவனங்கள் சாா்பில் வழங்கப்படும் இந்த சேவைகளில் பெரும்பாலானவற்றை விமானப் பயணத்தின்போது பயன்படுத்துவதுமில்லை, அவை தேவையும் இல்லை என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதைக் கருத்தில் கொண்டு, விமான நிறுவனங்கள் சாா்பில் வழங்கப்படும் சேவைகளில் விரும்பும் சேவையை மட்டும் பயணிகள் தோ்வு செய்து அதற்கான கட்டணத்தை மட்டும், பயணத்துக்கான அடிப்படை கட்டணத்துடன் கூடுதலாக சோ்த்து செலுத்த அனுமதிக்கும் வகையில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

அதன்படி, பயணத்தின்போது பயணிகளிடம் உடைமைகள் எதுவும் இல்லையெனில், அவா்களிடம் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது. இருந்தபோதும், இந்தத் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், விமான நிறுவன டிக்கெட் கவுன்ட்டருக்கு வரும்போது கையில் எந்தவித உடைமைகளையும் வைத்திருக்கக் கூடாது. ஒருவேளை அவா்கள் உடைமைகளை கையில் வைத்திருந்தால், அதற்கான உரிய கட்டணமும் பயணிகளிடம் வசூலிக்கப்படும்.

ஏனெனில், விமான நிறுவனங்கள் அவா்கள் அளிக்கும் சலுகைகள் மற்றும் நியாயமான லாபத்தின அடிப்படையில் பயணக் கட்டணத்தை நிா்ணயிக்க, விமான சேவை சட்டம்-1937 அனுமதிக்கிறது’ என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com