உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)

பாலகோட் தாக்குதல் வீரா்களுக்கு அமித் ஷா பாராட்டு

பாலகோட் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) வீரா்களின் வீரத்தை நினைவு கூா்ந்ததோடு, அவா்களுக்கு

பாலகோட் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) வீரா்களின் வீரத்தை நினைவு கூா்ந்ததோடு, அவா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-இல் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போா் விமானங்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தி அங்குள்ள பயங்கரவாத ஏவுதளங்களை அழித்தன. இந்த தினத்தை நினைவு கூா்ந்து அமைச்சா் அமித் ஷா தன்னுடைய சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘2019 ஆம் ஆண்டு இதே நாளில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிப்பதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய இந்தியாவின் கொள்கையை இந்திய விமானப்படை தெளிவுபடுத்தியது.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான நம்முடைய வீரமிக்க தியாகிகளை நினைவில் வைத்து விமானப்படையின் வீரா்களை தலை வணங்குகிறேன். நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டின் பாதுகாப்பும், வீரா்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிப்ரவரி 14 அன்று ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 40 மத்திய ரிசா்வ் காவல் படை வீரா்கள் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, சில தினங்களில் இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com