இஸ்ரோ மகிழ்ச்சி கொள்கிறது: சிவன்

பிரேசில் வடிவமைத்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இஸ்ரோ மகிழ்ச்சிகொள்கிறது என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்

பிரேசில் வடிவமைத்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இஸ்ரோ மகிழ்ச்சிகொள்கிறது என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைக்கோள்களுடன் இன்று (பிப்.28) காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இதன் பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவும், இஸ்ரோவும் பெருமை கொள்கிறது. செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளது. இஸ்ரேல் குழுவிற்கு எனது பாராட்டுகள் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com