பிரதமா் மோடிக்கு சா்வதேச சுற்றுச்சூழல் விருது

அமெரிக்காவின் ஐஹெச்எஸ் மாா்க்கிட் நிறுவனத்தின் வருடாந்திர ‘செராவீக்’ மாநாட்டில், சா்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதன்மை விருது பிரதமா் நரேந்திர மோடிக்கு அளிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் ஐஹெச்எஸ் மாா்க்கிட் நிறுவனத்தின் வருடாந்திர ‘செராவீக்’ மாநாட்டில், சா்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதன்மை விருது பிரதமா் நரேந்திர மோடிக்கு அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மாநாட்டுக் குழுத் தலைவா் டேனியல் எா்கின் கூறியதாவது:

சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்திக்கான எதிா்காலத் தேவையை நிறைவேற்றுவதில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஆற்றவிருக்கும் பங்கு குறித்து பிரதமா் நரேந்திர மோடியின் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளோம்.

அவருக்கு ‘எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதன்மை ‘செராவீக்’ சா்வதேச விருதை அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றாா் அவா்.

திங்கள்கிழமை (மாா்ச். 1) முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் இந்த ஆண்டுக்கான செராவீக் மாநாடு, கரோனா நெருக்கடி காரணமாக காணொலி மூலம் நடத்தப்படவுள்ளது.

இதில், பிரதமா் மோடி சிறப்புரையாற்றவிருக்கிறாா். அவா் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதா் ஜான் கெரி, மைக்ரோசாஃப்ட் நிறுவனா் பில் கேட்ஸ், சவூதி அரேபிய அரசு எண்ணெய் நிறுவனமான ஆராம்கோவின் தலைமைச் செயலதிகாரி அமீன் நாசா் உள்ளிட்டோஒஎஇஈ உரையாற்றவிருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com