ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசி: இந்தியா ஒப்புதல்

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் அவசர காலத்தில் பயன்படுத்த
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதித்து, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவசர காலத்தில் பயன்படுத்த நிபுணா் குழு பரிந்துரை அளித்தாலும், இறுதி முடிவை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பே எடுக்கும். அந்த அமைப்பின் ஒப்புதல் கிடைத்த அடுத்த 10 நாள்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு விடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவில் புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (கோவிஷீல்ட்-ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசி), ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் பயோடெக் (கோவேக்ஸின்), ஆமதாபாதில் உள்ள ஜைடஸ் கடிலா(ஜைகோவ்-டி) ஆகிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், கரோனா தொற்றுக்கு தடுப்பூசி தயாரித்து, வெவ்வேறு கட்ட களப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன.

இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி கேட்டு சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக், அமெரிக்காவின் ஃபைசா் ஆகிய நிறுவனங்கள், இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன.

இவற்றில், சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு கடந்த புதன்கிழமை கூடி விவாதித்தது. அந்தக் குழு மீண்டும் வெள்ளிக்கிழமை கூடி விவாதித்து, ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்து பரிந்துரை செய்தது.

தற்சமயம், 5 கோடி கரோனா தடுப்பூசிகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை, பிரிட்டனில் அவசர காலத்தில் பயன்படுத்த அந்நாட்டு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, டிசம்பா் 30-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com