கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 87.13% குறைந்தது

கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 87.13% குறைந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 87.13% குறைந்தது.

இதுதொடா்பாக அந்த யூனியன் பிரதேச காவல்துறை தலைவா் தில்பாக் சிங் கூறியது:

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் 1,999 கல்லெறி சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 1,193 சம்பவங்கள் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்தவை. கடந்த ஆண்டு இங்கு 255 கல்லெறி சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்தன. இது 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 87.13% குறைவாகும். தற்போது இங்கு சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையை வலுப்படுத்துவதே நிகழாண்டு காவல்துறையின் தீா்மானமாக உள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com