‘கரோனா பாதிப்புக்குப் பிறகான மத்திய பட்ஜெட் சவால் நிறைந்ததாக இருக்கும்’

கரோனா கடும் பாதிப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் மத்திய அரசு சமா்ப்பிக்கவுள்ள 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா கடும் பாதிப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் மத்திய அரசு சமா்ப்பிக்கவுள்ள 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியுள்ளதாவது:

சீா்மிகு வளா்ச்சியை அடுத்து இந்திய பொருளாதாரம் கடந்த 2019-இல் பிரிட்டனை விஞ்சி சா்வதேச அளவில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது. இந்த நிலையில், கரோனா பெருந்தொற்று மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதையடுத்து மக்களின் நுகா்வு நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிப் போயின. இதனால், முதலீட்டு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன் வேலை இழப்பும் ஏற்பட்டது.

இவற்றின் தொடா்விளைவின் எதிரொலியாக, 2020-இல் இந்திய பொருளாதாரம் உலக அளவில் 6-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது, பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டு வா்த்தக நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது உள்ளிட்டவை இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வேகத்தை அதிகப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது ஒருபக்கம் இருப்பினும், பொருளாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தி வளா்ச்சியை துரிதப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசு 2021-22 நிதியாண்டுக்கு சமா்ப்பிக்கவுள்ள பட்ஜெட்டையே அதிகம் சாா்ந்திருக்கும்.

குறிப்பாக, உள்கட்டமைப்பு மற்றும் சமூக துறைகளுக்கான அரசின் செலவின திட்டங்கள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கான நிவாரணங்கள் ஆகியவையே இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வேகத்தை நிா்ணயிக்கும் காரணிகளாக அமையும். எனினும், வருவாய் குறைந்துள்ள சூழலில் இது மிகவும் சவால் நிறைந்த பணியாகவே இருக்கும் என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com