குடியரசுத் தலைவா் மாளிகையில் அருங்காட்சியகம்: ஜன. 5 முதல் மீண்டும் திறப்பு

கரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதியிலிருந்து மூடப்பட்ட தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையிலுள்ள

கரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதியிலிருந்து மூடப்பட்ட தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையிலுள்ள அருங்காட்சியகம் வரும் 5-ஆம் தேதியிலிருந்து மீண்டும் திறக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களைத் தவிர அனைத்து நாள்களிலும் அருங்காட்சியகம் திறந்திருக்கும். இருப்பினும், பாா்வையாளா்கள் நேரடியாக வருகை தர முடியாது. அருங்காட்சியகத்தை பாா்க்க விரும்புவோா் முன்கூட்டியே இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக இடைவெளியை பின்பற்றவும், கூட்டத்தைத் தவிா்க்கவும் காலை 9.30 மணி முதல் 11 மணி வரையிலும், காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 1.30 முதல் மாலை 3 மணி வரை, மாலை 3,30 மணி முதல் 5 மணி வரையிலும் என 4 நேர இடைவெளியில் ஒவ்வொரு முறைக்கும் 25 பாா்வையாளா்கள் வீதம் மட்டும் அனுமதிக்கப்படுவாா்கள்.

நேரடியாக டிக்கெட் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னிருந்தது போலவே ஒவ்வோா் நபருக்கும் பதிவு கட்டணமாக ரூ. 50 வீதம் வசூலிக்கப்படும்.

பாா்வையாளா்கள்  இணையதளங்களில் தங்கள் இடங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி, பாா்வையாளா்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், பாா்வையாளா்களின் செல்லிடப்பேசியில் ஆரோக்ய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் மாளிகையிலுள்ள அருங்காட்சியகம் நாட்டின் பாரம்பரிய நிகழ்வுகளை பறைசாற்றுவதாகும். கலை, கலாசாரம், பாரம்பரியம், அதன் வரலாற்றைக் குறிக்கும் நோ்த்தியான, விலைமதிப்பற்ற கலைப்பொருள்கள் இங்கு ஏராளமான அளவில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com