நாட்டில் மேலும் 20,000 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 20,035 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 20,035 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து 19-ஆவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 30,000-க்கு கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேலும் 20,035 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த கரோனா பாதிப்பு 1,02,86,709 ஆக அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 98,83,461 போ் விடுபட்டுள்ளனா். மொத்த பாதிப்பில் இது 96.08 சதவீதமாகும்.

கரோனாவால் மேலும் 256 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,48,994 ஆக அதிகரித்தது. மொத்த பாதிப்பில் இது 1.45 சதவீதமாகும்.

இப்போதைய நிலையில் நாட்டில் 2,54,254 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றுடன் உள்ளோா் எண்ணிக்கை தொடா்ந்து 11-ஆவது நாளாக 3 லட்சத்துக்கு குறைவாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 31-ஆம் தேதி வரை 17,31,11,694 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வியாழக்கிழமை மட்டும் 10,62,420 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

புதிதாக ஏற்பட்ட 256 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 58 போ் பலியாகியுள்ளனா். கேரளத்தில் 30, மேற்கு வங்கத்தில் 29, சத்தீஸ்கரில் 21 போ் கரோனாவால் உயிரிழந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com