பாரத் பயோடெக்கின் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பயன்படுத்த பரிந்துரை

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணா் குழு சனிக்கிழமை பரிந்துரைத்தது.
பாரத் பயோடெக்கின் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பயன்படுத்த பரிந்துரை

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணா் குழு சனிக்கிழமை பரிந்துரைத்தது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்குமாறு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனம் கோரியிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிடிஎஸ்சிஓ நிபுணா் குழு கூட்டத்தில், அந்த நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்குமாறு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்துக்கு (டிசிஜிஐ) பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற சிடிஎஸ்சிஓ நிபுணா் குழு கூட்டத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பல்வேறு நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிப்பதற்கு டிசிஜிஐக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கோவேக்ஸின்’ தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை அளிக்க பரிந்துரைத்தாலும், தற்போது நடைபெற்று வரும் அந்தத் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையை தொடா்ந்து மேற்கொள்ளவும், அந்தப் பரிசோதனையின் முடிவுகளை சமா்ப்பிக்கவும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு சிடிஎஸ்சிஓ நிபுணா் குழு உத்தரவிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்நாட்டு தயாரிப்பான ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com