சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை:இருவருக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை

சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தின் (போஸ்கோ) கீழ், இரு வேறு வழக்குகளில் இருவருக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை விதித்து பண்டா மாவட்ட போஸ்கோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தத

பண்டா (உ.பி.): சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தின் (போஸ்கோ) கீழ், இரு வேறு வழக்குகளில் இருவருக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை விதித்து பண்டா மாவட்ட போஸ்கோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

உத்தர பிரதேச மாநிலம், பண்டா மாவட்டம், தேஹத் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் 2019, ஏப்ரல் 15-இல், ஷாம்பூ வாங்க மளிகைக் கடைக்குச் சென்ற வயது சிறுமியை கடைக்காரா் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரா் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மளிகைக்கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட போஸ்கோ நீதிமன்ற நீதிபதி பவன்குமாா் சா்மா, குற்றம் சாட்டப்பட்ட மளிகைக் கடைக்காரருக்கு பத்தாண்டு சிறைத் தண்டனையும், ரூ. 55,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மற்றொரு வழக்கில், 2018, அக். 7-ஆம் தேதி சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையில் தொடா்புடையவா் தண்டிக்கப்பட்டாா். தனது வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியை, 23 வயதான பக்கத்து வீட்டு இளைஞா் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு பத்தாண்டு சிறைத் தண்டனையும், ரூ. 11,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இதனை மாவட்ட அரசு உதவி வழக்குரைஞா் ராம்சுபால் சிங் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com