சட்ட மசோதாக்களை முன்கூட்டியே அரசு வலைதளங்களில் வெளியிட உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

அனைத்து சட்ட மசோதாக்களையும் நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பாகவே அரசு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அனைத்து சட்ட மசோதாக்களையும் நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பாகவே அரசு வலைதளங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவா் கூறியிருப்பதாவது:

இன்றைய ஜனநாயக நடைமுறையில், ஊடக மற்றும் தொழில்நுட்பங்கள் அபார வளா்ச்சி பெற்றுள்ள சூழலில் எந்தவொரு சட்டத்தையும் விரிவான விவாதத்துக்கு உட்படுத்தாமலும், கருத்துகளைக் கேட்காமலும் திடீரென ஒரே இரவில் மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்வது என்பது ஏற்புடையதாக அமையாது.

அந்த வகையில், விரிவான விவாதத்துக்கு உட்படுத்தாமலும், கருத்துகளைக் கேட்காமலும் புதிய வேளாண் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதால்தான், அரசியல்வாதிகளால் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கின்றனா்.

சட்ட மசோதாக்களை குடிமக்கள் முழுமையாக புரிந்துகொள்ளும் வகையில், அவற்றை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படுவதற்கு 60 நாள்களுக்கு முன்பாக அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயா்த்து அரசு வலைதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று மத்திய சட்டங்கள் கூறுகின்றன.

அந்தவகையில், அனைத்து சட்ட மசோதாக்களும் நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பாகவே அரசு வலைதளங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும். மேலும், நிறைவேற்றப்பட்ட இறுதி சட்டத்தின் விவரங்களும் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com