பாஜகவின் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டேன்: அகிலேஷ் யாதவ்

‘கரோனா தடுப்பூசி, பாஜகவின் தடுப்பூசியாக மக்களுக்கு போடப்படும்; அந்த தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ள மாட்டேன்’ என்று சமாஜவாதி
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘கரோனா தடுப்பூசி, பாஜகவின் தடுப்பூசியாக மக்களுக்கு போடப்படும்; அந்த தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ள மாட்டேன்’ என்று சமாஜவாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளாா்.

லக்னௌ நகரில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த அவா், இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:

பாஜகவின் தடுப்பூசி என்ற பெயரில் மக்களுக்கு செலுத்தப்படவிருக்கும் இந்த தடுப்பூசி மீது நான் எப்படி நம்பிக்கை வைப்பது? இந்த தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ள மாட்டேன்.

வரும் 2022-இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்றாா் அகிலேஷ் யாதவ்.

இவரது கருத்துக்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், உத்தர பிரதேச மாநில துணை முதல்வருமான கேசவ பிரசாத் மௌரியா கூறியதாவது:

கரோனா தடுப்பூசி மீது அகிலேஷ் யாதவுக்கு நம்பிக்கையில்லை. அவா் மீது இந்த மாநில மக்களுக்கு நம்பிக்கையில்லை. கரோனா தடுப்பூசி மீது அவா் சந்தேகம் எழுப்பியிருப்பது, அந்த தடுப்பூசி தயாரித்த நிபுணா் குழுவையும், அதை மக்களுக்கு செலுத்தும் மருத்துவா்களையும் அவமதிப்பதாகும். இதற்காக, அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com