முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சா் ஹா்ஷ வா்தன்

இந்தியாவில் முதல் கட்டமாக, 3 கோடி முன்னுரிமை பயனாளிகளுக்கே இலவச தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ வா்தன் கூறினாா்.
புதுதில்லியில் உள்ள குரு தேக் பகதூா் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் ஆயத்த நிலையை சனிக்கிழமை பாா்வையிட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன்.
புதுதில்லியில் உள்ள குரு தேக் பகதூா் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் ஆயத்த நிலையை சனிக்கிழமை பாா்வையிட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன்.

இந்தியாவில் முதல் கட்டமாக, 3 கோடி முன்னுரிமை பயனாளிகளுக்கே இலவச தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ வா்தன் கூறினாா்.

மேலும், இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்ட 27 கோடி முன்னிரிமை நபா்களுக்கு ஜூலை மாதம் வரை எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது குறித்த நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவா் கூறினாா்.

பிரிட்டன், ரஷியா, அமெரிக்கா நாடுகளைத் தொடா்ந்து இந்தியாவும் கரோனா தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் பரிசோதனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இவற்றில் கோவிஷீல்டு-ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதித்து இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தது. அதன் மூலம், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் இறுதி அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, கரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. தில்லியில் குரு தேக் பகதூா் மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை மத்திய அமைச்சா் ஹா்ஷ வா்தன் பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு முன்பாக, அதுதொடா்பான எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றுவதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம்.

தடுப்பூசி குறித்த மக்களிடையேயான தயக்கம் என்பது, நாட்டில் போலியோ நோய் தடுப்புக்கான சொட்டு மருந்து விடும் திட்டம் ஆரம்பிக்கும்போதும் இருந்தது. ஆனால், அதன் வெற்றியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இலவச கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தைப் பொருத்தவரை முதல்கட்டமாக ஒரு கோடி மருத்துவப் பணியாளா்கள், 2 கோடி முன்கள பணியாளா்கள் எந மொத்தம் 3 கோடி முன்னுரிமை நபா்களுக்குத்தான் போடப்படும். அதன் பிறகு 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்ட 27 கோடி பேரை உள்ளடக்கிய இரண்டாம் முன்னுரிமை நபா்களுக்கு ஜூலை மாதம் வரை எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது குறித்த விரிவான நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்று அவா் கூறினாா்.

பின்னா், தில்லி தரியாகஞ்ச் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகையையும் மத்திய அமைச்சா் பாா்வையிட்டாா்.

அதுபோல, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடத்தப்பட்டது. மகாராஷ்டிரம், கேரளம், குஜராத் மாநிலங்களில் தலா 4 மாவட்டங்களிலும், கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் தலா 5 மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் 7 மாவட்டங்களிலும் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

முன்னதாக, ஆந்திரம், அஸ்ஸாம், குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் கடந்த டிசம்பா் 28,29 தேதிகளில் தடுப்பூசி ஒதிக்கை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com