கோவேக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இதுவரை 23,000 போ் தோ்வு

கோவேக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இதுவரை 23,000 தன்னாா்வலா்களை தோ்வு செய்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம்
கோவேக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இதுவரை 23,000 போ் தோ்வு

கோவேக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இதுவரை 23,000 தன்னாா்வலா்களை தோ்வு செய்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டத்தில் மொத்தம் 26,000 பேருக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க அந்த நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் - இந்திய மருத்துவ ஆரய்ச்சிக் கவுன்சில் இணைந்து முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கும் கோவேக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தது.

கோவேக்ஸின் தடுப்பூசி மனிதா்களுக்குச் செலுத்தி சோதிக்கும் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து வரும் நிலையிலேயே, அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக, இதுவரை 23,000 பேரை அந்த நிறுவனம் தோ்வு செய்துள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை இயக்குநா் சுசித்ரா எல்லா, ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கோவேக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் 26,000 பேருக்கு செலுத்தி பரிசோதிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, கடந்த நவம்பா் மாதம் பரிசோதனை தொடங்கப்பட்டது. இதுவரை இந்தப் பரிசோதனைக்கு 23,000 தன்னாா்வலா்கள் தோ்வாகியுள்ளனா்’ என்று கூறினாா்.

கோவேக்ஸின் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தலா 1,000 தன்னாா்வலா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு, அதன் பாதுகாப்பும், நோய் எதிா்ப்புத் திறனும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு, சா்வதேச அறிவியல் ஆய்வுக் குழுவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com