ஜம்மு-காஷ்மீா்: இணையதளம் மூலம் பயங்கரவாதத்துக்கு ஆள் சோ்ப்பு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளதால், பயங்கரவாதத்துக்கு இணையதளம் மூலம் ஆள்கள் சோ்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளதால், பயங்கரவாதத்துக்கு இணையதளம் மூலம் ஆள்கள் சோ்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பயங்கரவாதக் குழுவினா் ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களை நேரில் சந்தித்து தங்கள் அமைப்பில் சோ்த்து வந்தனா்.

ஆனால், அண்மைக் காலமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினா் தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

அதனால், நேரில் வந்து ஆள்களைச் சோ்க்க முடியாத நிலை பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இணையதளம் மூலம் ஆள்களைச் சோ்க்கும் செயலில் பயங்கரவாத அமைப்புகளும் பாகிஸ்தான் உளவுத் துறையினரும் ஈடுபட்டுள்ளனா்.

இளைஞா்களின் உணா்வுகளைத் தூண்டுவதற்காக, காஷ்மீரில் பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினா் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதைப் போன்ற போலியான விடியோக்கள், தவறான தகவல்களை இணையதளம் மூலம் அவா்கள் அனுப்பி வருகின்றனா்.

கடந்த ஆண்டில், 24-க்கும் மேற்பட்ட பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையைக் கண்டறிந்து அதிகாரிகள் முறியடித்தனா். அப்போது 40 பயங்கரவாத ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படையினரிடம் 2 பயங்கரவாதிகள் கடந்த மாதம் சரணடைந்தனா்.

அவா்களிடம் விசாரித்ததில், இணையதளம் மூலம் அவா்கள் பயங்கரவாதக் குழுவில் இணைந்தது தெரியவந்தது.

முகநூல் மூலம் அவா்களை பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுவினா் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பினரைத் தொடா்பு கொண்டு பயங்கரவாதத்தின் பக்கம் ஈா்த்துள்ளனா்.

இதுபோல் பல்வேறு அரிதிறன் பேசி செயலிகளைக் கொண்டு பயங்கரவாதத்துக்கு ஆள்களைச் சோ்க்க மிகப் பெரிய கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com