புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 60,000 குழந்தைகள் பிறப்பு: உலக நாடுகளில் முதலிடம்!

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3.71 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன. அன்றைய தினம் அதிகபட்சமாக இந்தியாவில் 59,995 குழந்தைகள் பிறந்துள்ளன
புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 60,000 குழந்தைகள் பிறப்பு: உலக நாடுகளில் முதலிடம்!

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3.71 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன. அன்றைய தினம் அதிகபட்சமாக இந்தியாவில் 59,995 குழந்தைகள் பிறந்துள்ளன என்று ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறந்தன. அன்றைய தினம் பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள தீவு நாடான ஃபிஜியில் இந்த ஆண்டின் முதல் குழந்தை பிறந்தது. அமெரிக்காவில் அன்றைய தினத்தின் கடைசி குழந்தை பிறந்தது. புத்தாண்டு தினத்தில் பிறந்த மொத்த குழந்தைகளில் பாதி குழந்தைகள் 10 நாடுகளில் பிறந்தன. அவை இந்தியா (59,995), சீனா (35,615), நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), வங்கதேசம் (9,236), காங்கோ ஜனநாயகக் குடியரசு (8,640) ஆகிய நாடுகளில் பிறந்துள்ளன.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைகளின் சராசரி ஆயுள் 84 வயதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com