பிகார்: காங். மாநிலப் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பக்தசரண் தாஸ் நியமனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சக்திசிங் கோஹில், கட்சியின் பிகார் மாநிலப் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பக்தசரண் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிகார்: காங். மாநிலப் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பக்தசரண் தாஸ் நியமனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சக்திசிங் கோஹில், கட்சியின் பிகார் மாநிலப் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பக்தசரண் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 அண்மையில் நடைபெற்று முடிந்த பிகார் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்த மகா கூட்டணி அதிக இடங்களில் வென்றது. இருப்பினும் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மகா கூட்டணி ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனதற்கு காங்கிரúஸ காரணம் என கூட்டணிக் கட்சிகளே விமர்சித்தன.
 இந்நிலையில், பிகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மாநிலங்களவை உறுப்பினர் சக்திசிங் கோஹில் கட்சித் தலைமையிடம் கேட்டுக்கொண்டார்.
 இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "தனிப்பட்ட காரணங்களுக்காக அடுத்த சில மாதங்களுக்கு எளிதான பணியை தனக்கு ஒதுக்குமாறும், மாநிலப் பொறுப்பாளர் பதவியிலிருந்து தன்னை விரைவில் விடுவிக்குமாறும் கட்சித் தலைமையிடம் கேட்டுக் கொண்டேன்' என்று தெரிவித்தார்.
 கடந்த நவம்பரில் கரோனா தொற்றுக்குள்ளான கோஹில் இன்னமும் முழுமையாக குணமடையவில்லை.
 உடல்நிலை காரணமாகவே தன்னை தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 இந்நிலையில் அவரின் கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பிகார் மாநிலப் பொறுப்பாளர் பதவியிலிருந்து சக்திசிங் கோஹிலை விடுவித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பக்தசரண் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com