காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் பனிப்பொழிவு பதிவு செய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் பனிப்பொழிவு பதிவு செய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

பள்ளத்தாக்கின் சமவெளிகளில் தரையிலிருந்து இரண்டு அடிக்கு மேல் பனி குவிந்துள்ளது, அதே நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் கிட்டத்தட்ட நான்கு அடிக்குப் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து நான்காவது நாளாக மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் எந்த விமான போக்குவரத்தும் செயல்படவில்லை. 

பிரதான சலைகளில் போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பெரும்பாலான கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

கிராமப்புறங்களில் மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று பிற்பகல் வானிலை ஓரளவு சீரடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

சில்லாய் கலன் என்று அழைக்கப்படும் கடுமையான குளிர்காலத்தின் 40 நாள் காலம் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

மேலும், இன்றைய நிலவரப்படி ஸ்ரீநகரில் மைனஸ் 0.9 ஆகவும், பஹல்கம் மைனஸ் 1.2 மற்றும் குல்மார்க் மைனஸ் 3.5 ஆகவும் பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com