உருமாறிய கரோனா தொற்று: இந்தியாவில் பாதிப்பு 73 ஆக உயர்வு!

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்றால் இந்தியாவில் பாதிப்பு 73 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்றால் இந்தியாவில் பாதிப்பு 73 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் இருவருக்கு உருமாறிய கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 73 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, தில்லியில் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தில் பரிசோதிக்கப்பட்ட 8 பேர், தில்லி ஐ.ஜி.ஐ.பி.யில் 20 பேர், கொல்கத்தா ஆய்வகத்தில் ஒருவர், புனேவில் 30 பேர், ஹைதராபாத்தில் 3 பேர், பெங்களுருவில் 11 பேர் என இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா, இந்தியாவைப் போன்றே டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com