தொடரும் பனிப்பொழிவால் ஜம்மு-காஷ்மீரில் போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
கொட்டும் பனியால் நிறைந்த ஸ்ரீநகர் விமான ஓடுதளம்
கொட்டும் பனியால் நிறைந்த ஸ்ரீநகர் விமான ஓடுதளம்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு பகுதியில் 32.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் தோடா, படேர்வா, பானிஹால் மற்றும் ரம்பன் பகுதிகள் அதிகபட்சமாக 4 செ.மீ. பனிப்பொழிவை சந்தித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக மூடப்பட்ட நிலையில் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றுள்ளன. 

ஜவஹர் சுரங்கப்பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்ந்தாலும் கத்ரா மற்றும் ஜம்மு இடையேயான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

அதேசமயம் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஒன்பது விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்பொழிவு மற்றும் மழையை கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com