
Telangana's COVID-19 tally surges beyond 2.88 lakh with 417 new additions
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 417 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில், கடந்த 24 மணி நேர அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது,
தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி மேலும் 417 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 2.88 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், நோய் தொற்றுக்கு புதிதாக இருவர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதித்த 4,982 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நேற்று 43,318 சோதனைகள் மேற்கொண்டு நிலையில் இதுவரை 71 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து குணமடைந்தோரின் விகிதம் 97.73 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.