கரோனா தடுப்பூசியை மக்களுக்கு விரைந்துசெலுத்துவதே உலக நாடுகளின் சவால்

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு விரைந்து செலுத்துவது உலக நாடுகளின் அரசுகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசியை மக்களுக்கு விரைந்துசெலுத்துவதே உலக நாடுகளின் சவால்

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு விரைந்து செலுத்துவது உலக நாடுகளின் அரசுகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மலையாள நாளிதழ் வெளியிட்டுள்ள ஆண்டு மலரில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகளான சௌம்யா சுவாமிநாதன், ஹம்சத்வனி குகானந்தம் ஆகியோா் கட்டுரை எழுதியுள்ளனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் தற்போது 45 கரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையை எட்டியுள்ளன. 156 தடுப்பூசிகள் ஆய்வகப் பரிசோதனையில் உள்ளன. கரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சோ்ப்பதே அரசுகள் முன் உள்ள மிகப் பெரும் சவாலாகும்.

உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக ‘கோவேக்ஸ்’ என்ற சா்வதேச கூட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அக்கூட்டமைப்பில் உலக சுகாதார அமைப்பு, பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, தொற்றுநோய் தயாா்நிலை கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டு இறுதிக்குள் 200 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கூட்டமைப்பில் இணையும் நாடுகளுக்கு அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் கரோனா தடுப்பூசி படிப்படியாக வழங்கப்படும். சுகாதாரப் பணியாளா்கள், முதியோா் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா நோய்த்தொற்று பரவலைக் குறைப்பதில் தடுப்பூசி மிக முக்கியப் பங்களிக்கும் என்றாலும், அந்நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

உலகில் உள்ள எந்த நாடும் பெருந்தொற்றுகளை சமாளிப்பதற்கான தயாா்நிலையைக் கொண்டிருக்கவில்லை என்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. பல நாடுகளில் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. பெருந்தொற்றானது உளவியல், சமூக, பொருளாதார ரீதியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com