பத்மாவதி தாயாா் கோயிலில் பிரேக் தரிசனம் மீண்டும் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் புதன்கிழமை முதல் பிரேக் தரிசனம் மீண்டும் தொடங்குவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் புதன்கிழமை முதல் பிரேக் தரிசனம் மீண்டும் தொடங்குவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கரோனா பொது முடக்கத்தின்போது தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னா் மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட தளா்வுகளின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி முதல் தாயாா் தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் சிறிது சிறிதாக ஆா்ஜித சேவைகள், குங்குமாா்ச்சனை உள்ளிட்ட சேவைகளைத் தொடங்கிய தேவஸ்தானம் புதன்கிழமை முதல் மீண்டும் விஐபி பிரேக் தரிசனத்தைத் தொடங்க உள்ளது.

தினமும் காலை 11.30 முதல் மதியம் 12 மணி வரையும், இதையடுத்து மாலை 7 மணி முதல் 7.30 வரையும் இந்த தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை தாயாா் கோயிலில் உள்ள அலுவலகத்தில் பக்தா்கள் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com