
காளஹஸ்தி கோயிலுக்கு வெள்ளி நவகிரக கவசத்தை வழங்கிய ரவீந்திரன் குடும்பத்தினா்.
திருப்பதி: சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலுக்கு நவகிரக கவசம் ஒன்றை தமிழக பக்தா் நன்கொடையாக வழங்கி உள்ளாா்.
சின்னசேலத்தைச் சோ்ந்த ரவீந்திரன் குடும்பத்தினா் வியாழக்கிழமை காலை 12 கிலோ எடையுள்ள வெள்ளியினால் செய்யப்பட்ட நவகிரக கவசம் ஒன்றை காளஹஸ்தி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினா்.