மகாராஷ்டிரம்: கோழிப் பண்ணையில் 900 கோழிகள் பலி 

மகாராஷ்டிரத்தின் பர்பானி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் கோழிப் பண்ணை ஒன்றில் 900 கோழிகள் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தின் பர்பானி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் கோழிப் பண்ணை ஒன்றில் 900 கோழிகள் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முல்கிகர் கூறுகையில்,  

கோழிகள் இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அவற்றின் மாதிரிகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் கடந்த இரண்டு நாள்களில் 900 கோழிகள் இதுவரை உயிரிழந்துள்ளன.

சுய உதவிக்குழு நடத்தி வரும் இந்த பண்ணையில் 8 ஆயிரம் கோழிகள் வளர்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2 நாள்களில் திடீரென 900 கோழிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் கோழிகள் உயிரிழந்திருக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன.

கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் இருப்பது இருவரை உறுதிசெய்யவில்லை. 

2006-ஆம் ஆண்டில், வடக்கு மகாராஷ்டிரத்தின் நந்தூர்பார் மற்றும் துலே மாவட்டங்களில் எச் 5 என் 1 வைரஸ் பாதிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பறவைகளை பாதிப்புக்குள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com