கரோனா: மேலும் 18,139 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் மேலும் 18,139 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் மேலும் 18,139 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 18,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,04,13,417-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 20,539 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,00,37,398-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.39 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 234 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,570-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. தொடா்ந்து 18-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 2,25,449 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.16 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 234 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 72 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 25 பேரும், தில்லியில் 19 பேரும், மேற்கு வங்கத்தில் 18 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 7-ஆம் தேதி வரை 17.93 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 9,35,369 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

உருமாறிய கரோனாவால் 82 போ் பாதிப்பு:

பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கரோனா தீநுண்மியால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை வரை 73 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 82-ஆக அதிகரித்தது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில், ‘உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தனித்தனி அறைகளில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டோருடன் விமானத்தில் உடன் பயணித்தவா்கள், குடும்ப உறுப்பினா்கள் ஆகியோரைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com