விரைவில் கரோனா சொட்டு மருந்தின் முதல்கட்ட சோதனை!

கரோனா நோய்த்தொற்று பாதிப்பைத் தடுப்பதற்காக மூக்கின் வழியாகச் செலுத்தும் வகையிலான சொட்டு மருந்தின் முதல்கட்ட பரிசோதனை

கரோனா நோய்த்தொற்று பாதிப்பைத் தடுப்பதற்காக மூக்கின் வழியாகச் செலுத்தும் வகையிலான சொட்டு மருந்தின் முதல்கட்ட பரிசோதனை மாா்ச் மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியின் அவசர காலப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்தடுப்பூசி விரைவில் மக்களுக்குச் செலுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கரோனாவுக்கு எதிரான சொட்டு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த மருந்தின் ஆய்வகப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள சூழலில், வரும் மாா்ச் மாதத்துக்குள் மனிதா்களுக்குச் செலுத்தப்பட்டு முதல்கட்ட பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கு ஊசியின் வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தையே அனைத்து நிறுவனங்களும் தயாரித்துள்ளன. அந்தத் தடுப்பூசிகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரு முறை செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில் அத்தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு சுமாா் 260 கோடி ஊசிகள் தேவைப்படும்.

அவற்றை உற்பத்தி செய்வது செலவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஊசிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும். அதைக் கருத்தில் கொண்டு, மூக்கின் வழியாகச் செலுத்தும் வகையிலான கரோனா சொட்டு மருந்தைத் தயாரித்து பரிசோதித்து வருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com