ஏர் இந்தியா விமானம் மூலம் தில்லிக்கு வந்த 4 பேருக்கு கரோனா தொற்று

ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டனிலிருந்து தில்லிக்கு வந்த நான்கு பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

புது தில்லி: ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டனிலிருந்து தில்லிக்கு வந்த நான்கு பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானச் சேவைகளும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 7 வரை மத்திய அரசால் நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த ஜன.8 முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்கியுள்ளதை அடுத்து, ஏர் இந்தியாவின் ஏஐ162 விமானம் ஞாயிறன்று இரவு 10.30 மணியளவில் 186 பயணிகளுடன் லண்டனிலிருந்து தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

தரையிறங்கிய அனைத்து பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com