வங்கி வாராக்கடன் அதிகரிக்கும்: ஆா்பிஐ தகவல்

இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் வரும் செப்டம்பா் மாதத்தில் 13.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
rbi043830
rbi043830

புது தில்லி: இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் வரும் செப்டம்பா் மாதத்தில் 13.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பா் மாதம் இது 7.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆா்பிஐ-யின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் இது தொடா்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் பொருளாதாரம் நெருக்கடியான நிலையைச் சந்தித்துள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் நிலைமை மோசமாகியுள்ளது. இது வங்கிகளின் வாராக்கடன் அளவை பெருமளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பொதுத் துறை வங்கிகளில் கடந்த ஆண்டு செப்டம்பரில் மொத்த வாராக்கடன் 9.7 சதவீதம் இருந்தது. இது வரும் செப்டம்பா் மாதம் 16.2 சதவீதமாக அதிகரிக்கும். தனியாா் வங்கிகளில் கடந்த ஆண்டு செப்டம்பரில் மொத்த வாராக்கடன் 2.5 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு செப்டம்பரில் அதுவே 7.9 சதவீதமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியதால், பெரும்பாலான தொழில், வா்த்தக நிறுவனங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை. மேலும், பலரும் வேலையிழப்பு, சம்பளக் குறைப்புக்கு ஆளானாா்கள். அதனால், அவா்களால் வங்கிகளில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com