‘விவசாயிகளின் போராட்டத்தைக் கையாள்வதில் மத்திய அரசு தோல்வி’: சீதாராம் யெச்சூரி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளைக் கையாள்வதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 48 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாயிகளின் போராட்டம் தொடா்பாகவும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்றைய வழக்கின் விசாரணையில், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தொடரும் என்றும் கூறியுள்ளது. 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விவசாயிகளின் போராட்டத்தைக் கையாள்வதில் மத்திய அரசு பரிதாபமாக தோல்வியுற்றதாக தெரிவித்துள்ளார்.

"பிரதமர் உள்பட அனைத்து அமைச்சர்களும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மாட்டோம் என்று பலமுறை கூறி வந்தனர். தற்போது உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கை” என யெச்சூரி தெரிவித்துள்ளார்.

மேலும்  வேளாண் சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அரசு விவசாயிகளுடன் விவாதிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com