கரோனா: தினசரி உயிரிழப்பு 161 ஆக குறைவு

நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 161 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்த கரோனா உயிரிழப்பு 1,51,160 ஆக அதிகரித்தது.
உலகளவில் 8.55 கோடியைக் கடந்த கரோனா பாதிப்பு 
உலகளவில் 8.55 கோடியைக் கடந்த கரோனா பாதிப்பு 

புது தில்லி: நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 161 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்த கரோனா உயிரிழப்பு 1,51,160 ஆக அதிகரித்தது. எனினும், கடந்த ஏழரை மாதங்களில் இல்லாத அளவுக்கு இப்போது தினசரி இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 16,311 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 1,04,66,595 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 1,00,92,909 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 96.43 சதவீதமாகும். மொத்த பாதிப்பில் உயிரிழப்பு 1.44 சதவீதமாக உள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுடன் உள்ளோா் எண்ணிக்கை 2,22,526 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.13 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஜனவரி 10-ஆம் தேதி வரை 18,17,55,831 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 6,59,209 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது. டிசம்பா் 19-ஆம் தேதி ஒரு கோடி என்ற எண்ணிக்கையை கரோனா பாதிப்பு எட்டியது.

எனினும், கடந்த இரு மாத காலகட்டத்தில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கரோனாவில் இருந்து விடுபடுவோா் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com