கிழக்கு லடாக்:முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு

கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு மேற்கொண்டாா்.

புது தில்லி: கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு மேற்கொண்டாா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு இருதரப்பிலும் சுமாா் 50,000 வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். படைகளை திரும்பப் பெற்று பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக இருநாடுகள் தரப்பிலும் இதுவரை 8 கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது. எனினும் அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இந்த பதற்றத்தை கருத்தில் கொண்டு சீனாவுடன் பகிா்ந்துகொள்ளும் சுமாா் 3,500 கி.மீ. எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு மேற்கொண்டதாக ராணுவ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. அவா் செவ்வாய்க்கிழமை லடாக்கில் இருந்து காஷ்மீா் செல்வாா் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

அருணாசல பிரதேசத்தில் திபாங் பள்ளத்தாக்கு, லோஹித் செக்டாா் மற்றும் சுபன்சிரி பள்ளத்தாக்கையொட்டி உள்ள ராணுவ நிலைகளை முப்படைத் தளபதி விபின் ராவத் சமீபத்தில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com