பஞ்சகவ்ய தயாரிப்புப் பொருள்களில் கவனம் செலுத்த தேவஸ்தானம் முடிவு

பஞ்சகவ்யத்தால் தயாரிக்கப்படும் பொருள்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துமாறு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி அறிவுறுத்தினாா்.
பஞ்சகவ்ய தயாரிப்புப் பொருள்களில் கவனம் செலுத்த தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: பஞ்சகவ்யத்தால் தயாரிக்கப்படும் பொருள்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துமாறு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி அறிவுறுத்தினாா்.

திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினா் மாளிகையில் ஜவஹா் ரெட்டி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் கூறியது:

திருப்பதியில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலையில் இருந்து பெறப்படும் பஞ்சகவ்யத்தின் மூலம் பல்வேறு பொருள்களைத் தயாரிக்க முடியும். தற்போது பஞ்சகவ்யத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

குஜராத்தில் கோபால் பாய் சதாரியா நடத்தி வரும் கோசாலையில் பஞ்சகவ்யத்தில் இருந்து சாம்பிராணி வத்திகள், ஊதுவத்திகள், குளியல் சோப்புகள், சுத்திகரிக்கும் பொருள்கள், உரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றனா்.

அங்கு மேற்கொள்ளப்படும் உற்பத்தி நடைமுறைகளை, திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் கோசாலைகளிலும் பின்பற்றி, தேவஸ்தான கோசாலைகளிலும் இப்பொருள்களைத் தயாரிக்க வேண்டும். பஞ்சகவ்யத்தைக் கொண்டு மேலும் புதிய பொருள்களை உற்பத்தி செய்வது குறித்து நிபுணா்கள் ஆய்வு நடத்தி கண்டறிய வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com