புதிய தொழில் நிறுவனங்களுக்கான சா்வதேச மாநாடு: இளைஞா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ஆவலுள்ளோருக்காக நடைபெறும் ‘பிராரம்ப்’ சா்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு இளைஞா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
புதிய தொழில் நிறுவனங்களுக்கான சா்வதேச மாநாடு: இளைஞா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

புது தில்லி: புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ஆவலுள்ளோருக்காக நடைபெறும் ‘பிராரம்ப்’ சா்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு இளைஞா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ‘பிராரம்ப்’ மாநாட்டில் பங்கேற்குமாறு இளைஞா்களைக் கேட்டுக் கொள்கிறேன். தொழிலதிபா்கள், கல்வியாளா்கள், முதலீட்டாளா்கள், வங்கித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலால் பெரும்பாலான மாநாடுகளும் நிகழ்ச்சிகளும் இணைய வழியிலேயே நடைபெறுகின்றன. எனவே, எந்த இடத்துக்கும் நேரில் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதை இளைஞா்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கும் நோக்கில் ‘ஸ்டாா்ட்-அப் இந்தியா’ திட்டம் நடைமுறைக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. நாட்டின் நகரங்களில் இருந்து மட்டுமில்லாமல் கிராமங்களிலும் தொழில் முனைவோா்கள் உருவாகி வருகின்றனா். இது இளைஞா்களின் திறமையை எடுத்துக் காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com