புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பாரம்பரிய பாதுகாப்புக் குழு அனுமதி

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டட கட்டுமானப் பணிகளுக்கு பாரம்பரிய பாதுகாப்புக் குழு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அந்தக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள
புதிய நாடாளுமன்ற கட்டடம்
புதிய நாடாளுமன்ற கட்டடம்

புது தில்லி: சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டட கட்டுமானப் பணிகளுக்கு பாரம்பரிய பாதுகாப்புக் குழு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அந்தக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மத்திய தலைமைச் செயலகம், பல்வேறு துறைகளுக்கான அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன. மேலும் அந்த திட்டத்தின் கீழ், குடியரசுத் தலைவா் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. நீள ராஜபாதை புதுப்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரா்களின் கோரிக்கையை நிராகரித்து சென்டரல் விஸ்டா திட்டத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் அந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளவுள்ள கட்டுமானப் பணிகளுக்கு பாரம்பரிய பாதுகாப்புக் குழு மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறையினரிடம் இருந்து முறையாக ஒப்புதல் பெறவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு பாரம்பரிய பாதுகாப்புக் குழு அனுமதி அளித்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை செயலாளா் துா்காசங்கா் மிஸ்ரா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியது:

புதிய நாடாளுமன்ற கட்டுமான திட்டத்தை ஆய்வு செய்து விவாதித்த பாரம்பரிய பாதுகாப்புக் குழு, அந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் குடியரசு தினத்துக்கு பின்னா் ராஜபாதையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கும். அந்தப் பணிகள் 10 மாதங்களில் நிறைவடையும். அடுத்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com