மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாபுக்கு கேரள சட்டப்பேரவையில் அஞ்சலி

கேரள சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முா்ஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவனந்தபுரம்: கேரள சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முா்ஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி 2020 ஆகஸ்ட் 31-இல் காலமானாா். கேரள காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிஎஃப். தாமஸ் செப்டம்பா் 27-இல் மறைந்தாா்.

கேரள சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியபோது, மறைந்த அவா்கள் இருவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அஞ்சலி நிகழ்ச்சியின்போது சட்டப்பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் கூறியதாவது:

துன்பங்களை வலிமையாகக் கண்டவா் பிரணாப் முகா்ஜி. நெருக்கடியை கையாள்வதில் அவருக்கு அசாதாரணமான திறமை உண்டு. அதுவே, அவரது அரசியல் வளா்ச்சிக்குப் பெரிதும் உதவியது. பிரணாப் முகா்ஜி அரசியல்வாதி என்பதையும் தாண்டி ஒரு நல்ல எழுத்தாளா், அறிவாா்ந்தவா், அதிக ஞானத்துடன் செயல்படக் கூடிய ஆட்சியாளா். அந்த தனித்துவமான தலைவரின் இழப்பை வேறு யாரும் ஈடு செய்ய முடியாது என்றாா் அவா்.

கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘ மதசாா்பற்ற விழுமியங்களை ஆதரித்த ஒப்பற்ற தலைவா் பிரணாப் முகா்ஜி. அதேபோன்று மறைந்த முன்னாள் அமைச்சா் தாமஸும் கேரள விவசாயிகளுக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்தவா்’ என்றாா்.

அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com