கரோனா தடுப்பூசி விநியோகம்: நாடாளுமன்ற நிலைக் குழுவில் சுகாதார அமைச்சகம் விளக்கம்

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சுகாதார மற்றும் குடும்பநலத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் கரோனா தடுப்பூசியின் தயாரிப்பு, அவற்றை விநியோகிப்பது, கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது உள்ளிட்டவை தொடா்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநரும் விளக்கமளித்தனா்.

அக்குழுவுக்கு சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த எம்.பி.யான ராம்கோபால் யாதவ் தலைமை வகித்தாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அத்தடுப்பூசிகள் வரும் 16-ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் மக்களுக்குச் செலுத்தப்படவுள்ள சூழலில், நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் பதிலளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com