கரோனா எதிரொலி: குஜராத் கோயில்களில் விழுந்து கும்பிட தடை

கரோனா பேரிடருக்குப் பிந்தைய மனிதர்களின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் கோயில்களில் சுவாமியை வணங்கும் முறையும் இணைந்து கொண்டுள்ளது.
கரோனா எதிரொலி: குஜராத் கோயில்களில் விழுந்து கும்பிட தடை
கரோனா எதிரொலி: குஜராத் கோயில்களில் விழுந்து கும்பிட தடை


ஆகமதாபாத்: கரோனா பேரிடருக்குப் பிந்தைய மனிதர்களின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் கோயில்களில் சுவாமியை வணங்கும் முறையும் இணைந்து கொண்டுள்ளது.

அதாவது, குஜராத்தில் உள்ள கோயில்களில், கோயிலை வலம் வந்த பிறகு, விழுந்து வணங்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிலாக பக்தர்கள் அனைவரும் நின்று கையெடுத்து கும்பிட மட்டுமே செய்யலாம்.

அதுபோலவே, வெளியிலிருந்து பிரசாதம் செய்து கொண்டு வந்து கோயிலுக்குள் பக்தர்களுக்கு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, கோயில்களில் விழுந்து கும்பிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக குஜராத்தில் உள்ள சோமநாதர் திருக்கோயிலின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com