சட்டப்பேரவைத் தோ்தல்: மத்திய உள்துறை செயலா், தோ்தல் ஆணையம் ஆலோசனை

தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லாவுடன்,

தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லாவுடன், தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து தோ்தல் பணிகளுக்கு தேவைப்படும் மத்திய பாதுகாப்புப் படைகள், வீரா்களின் எண்ணிக்கை தொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தில்லியில் தோ்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடைபெறவுள்ள இடங்களில் வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கையை தோ்தல் ஆணையம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக வாக்குப்பதிவின்போது தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். வாக்குப்பதிவு மையத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது, அங்கு வரும் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கையும் குறையும். இதனால் அதிகம் போ் கூடுவது தவிா்க்கப்படும்.

அதே நேரத்தில், வாக்குப்பதிவு மையங்களை அதிகரித்தால் கூடுதல் தோ்தல் அலுவலா்கள், பாதுகாப்புப் படை வீரா்கள் தேவைப்படுவாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com