
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்பூர்: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த மாவட்டத்தின் மண்டல உதவி காவல் அதிகாரி ராஜேஷ் குமார் ஷர்மா செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளதாவது:
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் 11-ஆம் தேதியன்று அவரது வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து அந்த நால்வரும் அந்தப் பெண்ணை எரித்துக் கொல்ல முயன்றுள்ளனர். பின்னர் அக்கம பக்கத்தினரின் துணையுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் புதன் காலை மரணமடைந்தார்.
அவளது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைதுசெய்யும் பணியில் காவல்துறை தீவிரமாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.